Tuesday, February 15, 2011

பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள்

Prof. (Mrs.) SSMK Hiriburegama
Vice-Chancellor
University of Colombo

Prof. SBS Abayakoon
Vice-Chancellor
University of Peradeniya


Dr. NLA Karunaratne
Vice-Chancellor
University of Sri Jayewardenenpura


Prof. Sarath Amunugama
Vice-Chancellor
University of Kelaniya


Prof. M Ranasignhe
Vice-Chancellor
University of Moratuwa


Prof. N Shanmugalingam
Vice-Chancellor
University of Jaffna


Prof. Susirith Mendis
Vice-Chancellor
University of Ruhuna


Prof. U Vidanapathirana
Vice-Chancellor
The Open University of Sri Lanka


Dr. N Pathmanathan
Vice-Chancellor
Eastern University


Dr. SMM Ismail
Vice-Chancellor
South Eastern University


Prof. KA Nandasena
Vice-Chancellor
Rajarata University of Sri Lanka


Prof. MS Rupasinghe
Vice-Chancellor
Sabaragamuwa University


Prof. ANF Perera
Vice-Chancellor
Wayamba University


Mr. CJ Embuldeniya
Vice-Chancellor
Uva Wellassa University


Prof. Jayasena Kottegoda
Vice-Chancellor
University of the Visual and Performing Arts


Ven. Prof. Ittademaliye Indasara Thero
Vice-Chancellor
Buddhist & Pali University of Sri Lanka


Ven. Dr. Thumbulle Seelakkhanda Thero
Vice-Chancellor
Buddhasravaka Bhiksu University



Mr. N Logeswaran
Actg. Rector
Trincomalee Campus


Mr. R Nanthakumaran
Rector
Vauvniya Campus

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி....

மைக்ரோசொப்ட் ஸ்தாபகர் பில்கேட்ஸ் வாழ்க்கை வரலாறு (Billgates)



இன்றைய நவீன மயமான உலகத்திலே தொழில்நுட்பத் திறனையும் அதன் வளர்ச்சியையும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அந்த வகையிலே சிறுவயதில் இருந்து கணினி மென்பொருள் துறையில் சுய விடாமுயர்ச்சியினால் முன்னேறி வெற்றி வாகை சூடி உலகக் கோடீஸ்வரர் எனப் பெயர்பெற்ற மைக்ரோசொப்ட் அதிபர் பில்கேட்ஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம் .

அமெரிக்காவிலே சியாடில் என்ற ஓர் அழகிய அற்புதமான இயற்கை எழில் கொஞ்சும் நகரில் வாழ்ந்து வந்த வில்லியம் ஹென்றி கேட்ஸ் மேரி தம்பதியினருக்கு மகனாக (1955 -10௦-28 ) ம் நாளன்று பிறந்தார். அப்போது தந்தையார் வில்லியம் ஹென்றி கேட்ஸ் புகழ்பெற்ற வழக்கறிஞர் ஆகவும் தாயார் கல்லூரி ஆசிரியையாகவும் கடமையாற்றினார்கள்.

கணினியை பில் பிடித்துக்கொண்டானோ அல்லது கணினி பில்லைப் பிடித்துக்கொண்டதோ தெரியாது.இவரிடம் சிறுவயதில் இருந்தே அறிவியல், கணிதம் போன்ற துறைகளில் நாட்டம் அதிகமாக காணப்பட்டது. சிறுவயதில் பாடசாலையில் முதலாவது மாணவனாக பில் திகழ்ந்ததால் இவர் ஆசிரியர்களின் செல்ல மாணவனாக திகழ்ந்தார்.

எட்டாம் வகுப்பில் படிக்கும் போதே கணினி கல்வியில் ஆர்வம் காட்டினார் பில். அக்காலத்தில் அமெரிக்கா ஐக்கிய நாடுகளில் கூடக் கணினி ஓர் ஆடம்பரப் பொருளாக ,அனைவருக்கும் எட்டாத ஒரு கருவியாக இருந்தது.

அப்பொழுது அப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் (அன்னையர் சங்கம் ) மாணவர்களின் நலன் கருதி கணினி நிறுவனம் ஒன்றுடன் உடன்படிக்கை செய்து கொண்டது. இதன் மூலமாகக் கணினியை மாணவர்கள் பயன்படுத்தும் வாய்ப்பை பெற்றுக் கொண்டனர். அப்போது பயன்படுத்திக் கொண்டவர்களில் முக்கியமானவர்கள் பில் கேட்ஸும் அவன் நண்பன் பால் ஆலனும் ஆவர். இவர்களில் பில்கேட்ஸ் எட்டாம் வகுப்பு மாணவனாகவும் பால் ஆலன் பத்தாம் வகுப்பு மாணவன் ஆகவும் இருந்தனர். ஆனால் கணினிக் கல்வியைக் கற்பதில் இருவருக்கும் தணியாத ஆர்வம் ,தீராத தாகம் .அனால் அவர்களின் பாடசாலையில் திறமையான கணினி ஆசிரியர் கூட அப்போது இருக்கவில்லை. இருப்பினும் இரு நண்பர்களும் ஆசிரியர்களே வியக்கும் வகையில் தங்களின் கணினி அறிவை வளர்த்துக் கொண்டார்கள். கணினித் தொழிற்பாடு பற்றிய நூல்களை எல்லாம் ஆர்வமாக தேடித் படித்தார்கள்.

programming மொழியில் இவர்களுக்கு தனி வெறியே ஏற்பட்டுவிட்டது எனலாம். இதனால் இவர்களுக்கு இரவு ,பகல், என்று கிடையாது. பாடசாலை நேரம் ,விடுமுறை என்று கிடையாது. கடும் பயிற்சியில் இருவரும் ஈடுபட்டனர். நடைமுறை வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் ப்ரோக்ராம்மிங் மொழிகளை உருவாக்க பில் ஆர்வம் கொண்டான். சுருக்கச் சொன்னால் கணினியால் இருவரும் புகுந்து விளையாடிப் புதுமைகள் காண விரும்பினர்.

ஆனால் அக்கால கட்டத்தில் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் நிதி நெருக்கடி காரணமாக பிள்ளைகளின் பெற்றோர்களிடம் நிதி அறவிட்டு செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்ட பொழுது மட்டுப்படுத்தப்பட்ட நேரம் வழங்கப்பட்டது .அது பில்லுக்கு போதுமானதாக காணப் படவில்லை.

பாடசாலையில் கணினிக்கல்விக்கு ஆபத்து நேரிட்ட போதும் பில்லும் , பாலுவும் பல்கலைக்கழக இளைஞர்களின் ஸி.ஸி.ஸி நிறுவனத்துடன் இணைந்து கொண்டார்கள். இவர்கள் அவர்களைவிடச் சிறியவர்களாக காணப்பட்டமையால் இவர்களின் திறமையில் நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனாலும் பில்லுக்கும் ,பாலுக்கும் மீண்டும் நீண்ட நேரம் கணினியுடன் உறவாட வாய்ப்புக் கிடைத்தது.

பாடசாலைக் கல்வியை முடித்த பிறகு மேல் படிப்பை தொடர்ந்து அப்பாவைப்போல் வக்கீலாகி விட வேண்டும் என்று குடும்பத்தினரும் உறவினர்களும் வற்புறுத்தினர். ஆனால் பில்லின் ஆழ்மனதில் விதைக்கப்பட்ட கணினிக் கனவுகள் ,கணினி programming யை சுற்றி சுற்றி வந்தன.

பில்லும் , பாலும் அங்கு உள்ளவர்களை விடத் திறமையாக நேரகாலம் பாராது வேலை செய்த போதும் அவர்களுக்கு மாணவர்களுக்குரிய கொடுப்பனவே வழங்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் பணத்திற்காக அங்கு வேலை செய்யவில்லை. கணினியுடன் வேலை செய்யும் வாய்ப்புக்காக பணியை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இதில் வெற்றி கண்டனர். இதன் பின்னர் பாடசாலை இறுதித் தேர்விலும் சிறப்பாக வெற்றி பெற்றார் பில். ஆனால் பாலு பாடசாலைக் கல்விக்கு முழுக்குப் போட்டுவிட்டான். மேலும் பில் பெற்றோர்களின் விப்பத்திற்கு இணங்க வக்கீல் கல்வியை அவரால் தொடர முடியாத நிலையில் இடைநிறுத்தினார்.

அதன் பின்னர் பில்லும் பாலும் ஒரு கணினி நிறுவனத்தை ஆரம்பித்து பற்றி கனவு காண்பார்கள். திட்டம் தீட்டுவார்கள். விவாதிப்பார்கள்.ஆனால் நிதி நெருக்கடியினால் அவர்கள் திட்டத்தை தள்ளிப் போட்டு விட்டார்கள்.

ஆனால் அவர்களிடம் ஆசை இருந்தது ,ஆற்றல் இருந்தது. அறிவு இருந்தது. அனுபவமும் கூடவேயிருந்தது .காலம் மட்டும் கனியவில்லை. 1974 ம் ஆண்டு இன்டெல் (intel) நிறுவனம் புதியதோர் Micro Processor யை அறிமுகம் செய்தது. அதன் programming பணிக்கு அந்நிறுவனம் பில் ,பால் இடமும் உதவியை நாடியது. இச்சந்தர்ப்பத்தைச் சரியாக பயன்படுத்தி வெற்றி காண வேண்டும் என்ற ஆர்வத்துடன் COBOL, FORTRON, PASCAL போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்ற அவர்கள் BASIC முறையில் programming எழுத ஆரம்பித்தனர்.

அனால் இப்பணியை விரைவாக முடிக்க வேண்டும் ,பிழையின்றி முடிக்க வேண்டும் ,மற்றவர்களை முந்திக்கொண்டு முடிக்க வேண்டும் ,சரியாக முடிக்க வேண்டும் என்று எண்ணினார்கள். அல்லாவிட்டால் தமது இரவு பகல் பாராது உழைத்த கடினமான உழைப்பு பயனற்றுப் போய்விடும் என்று எண்ணினார்கள்.

இவர்களின் விடாமுயற்சியினால் எழுதப்பட்ட programme ஆனது பரிசோதித்து பார்க்கப்பட்டது. முயற்சி வெற்றி கண்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த பில்லின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அப்போது பில்லுக்கு இருபது வயது .இந்த வெற்றியின் திருப்பு முனை அவர்களை உலகறியச் செய்தது.

1977 ஆம் ஆண்டு ஆல்புகர்க் நகரின் மிகப் பெரிய அடுக்கு மாடிக் கட்டடத்தின் எட்டாவது மாடியில் ஒரு அறையில் இவர்கள் நிறுவனத்தை ஆரம்பித்தனர். அந்த அறையில் அங்கும் இங்குமாகக் கணினிகள் கிடந்தன. விசைப்பலகைகளில் சில விரல்கை விளையாடிக் கொண்டிருந்தன. அங்கு சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ரைப்பிரைட்டரில் அமர்ந்து கொண்டிருந்தாள்.

திடீரென புயல் போல ஒரு பையன் அந்த அறைக்குள் நுழைந்து நிர்வாகியின் அறைக்குள் போய்க் கொண்டிருந்தான். ஹலோ ..ஹலோ ..யாரது? முதலாளி ஊரில் இல்லை என உரக்க குரல் கொடுத்தார். ஏனெனில் வெளியார் யாரும் அந்த அறைக்குள் நுழையக் கூடாது என்பது உத்தரவு.
அவனோ கதிரையில் அமர்ந்து கணினியில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். அந்தப் பெண் புதிதாக நியமனம் பெற்றவள்.அவள் வேகமாக தனது அலுவலகரை நோக்கிச் சென்று சார் யாரோ ஒரு பையன் .. அவள் முடிக்கவில்லை அவர் சிரித்தபடி பையனா? அவர் தான் இந்தக் கம்பனியின் முதலாளி பில்கேட்ஸ் என்றார். அந்தப் பெண்ணின் விழிகள் வியப்பில் விரிந்தன. இருபது வயது இந்த சின்ன பெடியன் இக் கம்பனியின் முதலாளியா? நம்பவே முடியவில்லை? ஆனால் உண்மை அதுதான்.

அச்சிறிய கம்பனி "மைக்ரோசொப்ட் "("Microsoft") என்ற பெயருடன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர ஆரம்பித்தது. இன்று உலகமே திரும்பிப்பார்க்கும் அளவுக்கு மைரோசொப்டின் இயங்கு மென் பொதிகளும் ,பிரயோக மென்பொதிகளும், புரோக்கிராம் மொழிகளும் , அனைத்துக் கணினிகளிலும் விரும்பிப் பயன்படுவதை அனைவரும் அறிந்ததே. இவ் வெற்றிக்கு பில்கேட்சின் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் மைக்ரோசொப்ட் உத்தியோகத்தர்களின் அயராத உழைப்பும் காரணம் என்றால் மிகையாகாது. இதனாலேயே மைக்ரோசொப்ட் உலகெங்கும் கொடி கட்டி பறக்க ஆரம்பித்தது.

இதற்கிடையில் பில்கேட்ஸ் எந்தக் கல்லூரியிலும் பட்டம் பெற்றவர் அல்லர். அவருக்குப் பட்டப் படிப்போ ,பட்டயப் படிப்போ முக்கியமானதாகத் தெரியவில்லை. கணினி மொழியில் அவர் கொண்டிருந்த ஆர்வமும் விடாமுயற்சியும் அவரை இன்று உலகம் அறிய வைத்தது.

தனது நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் திறமை மதிப்பிடப்பட்டு திறமைக்கேற்றவாறு ஊக்கிவிப்பு பரிசில்கள் ,சம்பள உயர்வு ,பதவி உயர்வு, போனஸ் என்பன வழங்கப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும். கடினமாக ,தீவிரமாக முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி வேலை செய்ய முடியாதவர்களை இந்த இடம் உங்களுக்கு ஏற்றதல்ல என்று சொல்லி வெளியே அனுப்பிவிடுவாராம்.

பில்கேட்சிடம் உள்ள ஒரு நல்ல அம்சம் தொழிலாளர் ,நிர்வாகி ,முதலாளி என்ற இரும்புத் திரைப் பிரிவு வேறுபாடுகள் இல்லை. எல்லோரும் கலந்து பழகலாம், ஆலோசனை வழங்கலாம் .
மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் பணியாற்றிய மெலிண்டா பிரெஞ்ச் என்ற பெண்ணை நேசிக்கத் தொடங்கினார். கண்டதும் காதல் என்று கொள்ளாது ஐந்து வருடங்களுக்கு மேலாக நெருங்கிப் பழகிய பின்னர் அந்த நட்பு காதலாக மலர்ந்தது. அவள் அழகைவிட அறிவால், உழைப்பால் உயர்ந்தவள். சுறுசுறுப்பானவள். ,கலகலப்பான இயல்பு உடையவள்.

1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் நாள் புது மணவாழ்வில் இணைந்து கொண்டனர். இவர்களுக்கு 1996 இல் ஒரு மகளும் 1999 இல் ஒரு மகனும் பிள்ளைச் செல்வங்களாக கிடைத்தன."ஆசைக்கொரு மகளும் ,ஆஸ்திக்கொரு மகனும் "என்பதே பலர் இலட்சியக் கனவு இந்த வகையிலும் பில்கேட்ஸ் கொடுத்து வைத்தவரானார்.

அமெரிக்கக் கோடை வள்ளல்களில் மூன்றாம் இடத்தை வகிக்கும் அவர் கோடீஸ்வரர் வரிசையிலும் மூன்றாவது இடத்தில் இன்று (2008 )உள்ளார்.

உலகில் எல்லாக் கணினிகளிலும் மைக்ரோசொப்டின் மென்பொருள்களே பயன்படுத்தப்படுகின்ற நிலையில் அதன் திருட்டு மென்பொருள் பாவனையை கடுமையாக எதிர்க்கின்றார் பில்கேட்ஸ் .இதனால் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மென்பொருளை அதிக விலை கொடுத்து வங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முன்னர் இவை குறைந்த பெறுமதியில் சாதாரண CD களில் அனைத்து இடங்களிலும் பெறக்கூடியதாக இருந்தது.

உலகில் மைக்ரோசொப்ட் மென்பொருள் மூலம் அன்றும் இன்றும் கொடி கட்டிப் பறக்கும் பில்கேட்ஸ் 1995 ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தந்து ஒரு மணித்தியாலத்திற்குள் தனது சொந்த விமானத்தில் திரும்பி விட்டார். பில்கேட்ஸ் தனது தலைமைப் பதவியை 27 .06 .2008 இல் ஸ்டீவ் போல்மருக்கு கொடுத்துவிட்டு அந்நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்று அவரால் ஸ்தாபிக்கப்பட்ட பில் அன்ட்மலிந்த பவுண்டேசன் எனப்படும் சமூக சேவை அமைப்பில் அதிக நேரத்த செலவிடுவதற்கு தீர்மானித்தார்.

"தான் கணினி பாதையில் சென்ற தூரம் சொற்பம்
செல்ல வேண்டிய தூரம் மிக மிக அதிகம் "
என்று கூறுகின்றார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலிருந்து பல்கலைக் கழகத்திற்கு தெரிவானோர் விபரம்



பொறியியல்
31
கணனி விஞ்ஞானம்
10
நில அளவையியல்
02
கணனி விஞ்ஞானம் தொழில்நுட்பமும்
10
தகவல் தொடர்பாடல்
10
பெள‌திக விஞ்ஞானம்
03
பிரயோக விஞ்ஞானம்
03
கணனி தகவல் தொகுதியியல்
11
மருத்துவம்
09
மருந்தியல்
01
விவசாயத் தொழில்நுட்பம்
01
கதிரியக்கவியல்
02
தாதியியல்
05
சூழல் பாதுகாப்பு முகாமைத்துவம்
02
விவசாய விஞ்ஞானம்
10
உயிரியல் விஞ்ஞானம்
04
விலங்கு விஞ்ஞானம்
05
ஏற்றுமதி விவசாயம்
01
சித்த மருத்துவம்
02
முகாமைத்துவம்
03
வர்த்தகம்
01
கலைத்துறை
09
மொத்தம்‍
135

பல்கலைக் கழகங்களின் சின்னங்கள்....





Monday, February 14, 2011

ஊவா வெல்லச பல்கலைக்கழகம்....


2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் தொழில்சார் கற்கை நெறிகளை உள்ளடக்கி அமைந்துள்ளது.இலங்கையில் இறுதியாக ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.ஆயினும் தமிழ் மாணவர்களிடையே மிகவும் பிரபல்ஜம் அடையாதது கவலைக்குரிய விடையமாகும்.

இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள கற்கை நெறிகள் தொடர்பான விடையங்கள் வருமாறு......

1.விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

2.கனியவளங்களும் தொழில்நுட்பமும்

3.கணினி விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

4.கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம்

5.விலங்கு விஞ்ஞானம்

6.நீர் வாழ் வளங்களும் தொழில்நுட்பமும்

7.ஏற்றுமதி விவசாயம்

8.தேயிலைத்தொழில் நுட்பமும் பெறுமதி சேர்ப்பும்

9.பனையினத்தாவரமும் இறப்பர்பால் தொழில்நுட்பமும்

10.தொழில் முயற்சியும் முகாமைத்துவமும்

11.விருந்தோம்பல் சுற்றுலா நிகழ்ச்சிகள் முகாமைத்துவம்.

சரி இதில என்ன படிக்க இருக்கு ....


· விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
இது ஒன்றும் நீங்க O/L ல படிக்கிறதில்ல.. முற்று முலுதாக தொழில் வாய்ப்புக்களுடன் வடிவமைக்கப்பட்ட கற்கைநெறி இது நான்கு வருட விசேட B-Tech பட்டத்தினை பின்வரும் துறைகளில் பெறுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

1.உணவுப் பொறியியல்(Food processing and Technology)

2.Mechatronics

3.Material Science and Technology


· கனியவளங்களும் தொழில்நுட்பமும்
இது B.Sc நான்கு வருட சிறப்பு பட்டத்தினை பின்வரும் துறைகளில் வழங்குகிறது.

1.கனிப்பொருள் விஞ்ஞானம்

2.நீரியல் விஞ்ஞானம்


· கணினி விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
இது B.Sc நான்கு வருட சிறப்பு பட்டத்தினை பின்வரும் துறைகளில் வழங்குகிறது.

1.கணினி மென்பொருள்

2.கணினி வன்பொருள்

3.கணினி வலையமைப்பு

4.பல்லூடகம் (Multimedia)

5.Artificial Intelligence


· கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம்
இது BIIT நான்கு வருட சிறப்பு பட்டத்தினை பின்வரும் துறைகளில் வழங்குகிறது.

இது கைத்தொழில் மென்னியல் கற்கை நெறிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இலங்கையில் முகாமைத்துவ தகவல் தொழில் நுட்பதுறையினை முன்னேற்றுவதற்க்காக வடிவமைக்கப்பட்ட கற்கை நெறியாகும்.


· விலங்கு விஞ்ஞானம்
BA.Sc நான்கு வருட சிறப்பு பட்டத்தினை பின்வரும் துறைகளில் வழங்குகிறது. இது இலங்கையை உள்நாட்டு கால்நடை உற்பத்தித்துறையில் தன்னிறைவடையச்செய்வதற்காக உருவாக்கப்பட்ட கற்கை நெறியாகும்


· நீர் வாழ் வளங்களும் தொழில்நுட்பமும்
இது B.Sc நான்கு வருட சிறப்பு பட்டத்தினை பின்வரும் துறைகளில் வழங்குகிறது.இது இலங்கையை உள்நாட்டு நீரியல் வளம் சார்ந்த உற்பத்தித்துறையில் தன்னிறைவடையச்செய்வதற்காக உருவாக்கப்பட்ட கற்கை நெறியாகும்


· ஏற்றுமதி விவசாயம்
இது B.Sc நான்கு வருட சிறப்பு பட்டத்தினை பின்வரும் துறைகளில் வழங்குகிறது.இது இலங்கையை உள்நாட்டு ஏற்றுமதி சார்ந்த உற்பத்தித்துறையில் தன்னிறைவடையச்செய்வதற்காக உருவாக்கப்பட்ட கற்கை நெறியாகும்


· தேயிலைத்தொழில் நுட்பமும் பெறுமதி சேர்ப்பும்
இது B.Sc நான்கு வருட சிறப்பு பட்டத்தினை பின்வரும் துறைகளில் வழங்குகிறது.இது இலங்கையை உள்நாட்டு பெறுமதி சேர்க்கப்பட்ட தேயிலை உற்பத்திக்காக உருவாக்கப்பட்ட கற்கை நெறியாகும்


· பனையினத்தாவரமும் இறப்பர்பால் தொழில்நுட்பமும்
இது B.Sc நான்கு வருட சிறப்பு பட்டத்தினை பின்வரும் துறைகளில் வழங்குகிறது.இது இலங்கையை உள்நாட்டு பனையினத்தவார பெறுமதி சேர்ப்புக்காகவும் இறப்பர்பால் சார் உற்பத்திக்காகவும் உருவாக்கப்பட்ட கற்கை நெறியாகும்


· தொழில் முயற்சியும் முகாமைத்துவமும்
இது BBM நான்கு வருட சிறப்பு பட்டத்தினை பின்வரும் துறைகளில் வழங்குகிறது.இது முகாமைத்துவத்துடன் தொழில் முயற்சியான்மையையும் ஒன்றினாத்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விருந்தோம்பல் சுற்றுலா நிகழ்ச்சிகள் முகாமைத்துவம்.
இது BBM நான்கு வருட சிறப்பு பட்டத்தினை பின்வரும் துறைகளில் வழங்குகிறது இது இலங்கை சுற்றுலாத்துறை சார் நாடென்ற வகையில் இலங்கையின் சுற்றுலாத்துறையை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்ட கற்கை நெறியாகும்

கட்புல, அரங்கேற்றல் கலைகள் பல்கலைக்கழகம்

  • சங்கீதம்
  • நடனம்
  • நாடகமும் அரங்கமும்
  • சித்திரமும் சிற்பமும்

    உள்நாட்டு மருத்துவ நிறுவகம், கொழும்பு பல்கலைக்கழகம்
  • ஆயுர்வேதம்
  • யுனானி

    கம்பஹா விக்கிரமாச்சி ஆயுர்வேத நிறுவகம், களனி பலகலைக்கழகம்
  • ஆயுர்வேதம்

    கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கணனிக் கல்லூரி
  • கணனி விஞ்ஞானம்
  • தகவல் தொடர்பாடலும் தொழில்நுட்பமும்


    சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகம்
  • சங்கீதம்
  • நடனம்
  • நாடகமும் அரங்கமும்
  • கட்புலமும் தொழில்நுட்பவியல் கலையும்

வயம்பப் பல்கலைக் கழகம்

கற்கை நெறிகள்

  • முகாமைத்துவ‌ம்
  • விவசாயம்
  • உணவு விஞ்ஞானமும் போசாக்கும்
  • பிரயோக விஞ்ஞானம்
  • உணவு உற்பத்தியும் தொழில்நுட்ப முகமைத்துவமும்

சப்ரகமுவ பல்கலைக் கழகம்

கற்கை நெறிகள்

  • கலை
  • முகாமைத்துவ‌ம்
  • விவசாயம்
  • உணவு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
  • உயிரியல் விஞ்ஞானம்
  • பெளதிக விஞ்ஞானம்
  • அளவையியல் விஞ்ஞானம்
  • விளையாட்டு விஞ்ஞானங்களும் முகமைத்துவமும்
  • உடற்றொழில் கல்வி
  • கணக்கிடலும் தகவல் முறைமைகளும்

ரஜரட்ட பல்கலைக் கழகம்

கற்கை நெறிகள்

  • மருத்துவம்
  • கலை
  • முகாமைத்துவ‌ம்
  • விவசாயம்
  • உயிரியல் விஞ்ஞானம்
  • பெளதிக விஞ்ஞானம்
  • சுகாதார விருத்தி
  • தகவல் தொடர்பாடலும் தொழில்நுட்பமும்

தென் கிழக்கு பல்கலைக் கழகம்

கற்கை நெறிகள்

  • கலை
  • முகாமைத்துவ‌ம்
  • வணிகவியல்
  • முகமைத்துவமும் தகவல் தொழில்நுட்பமும்
  • உயிரியல் விஞ்ஞானம்
  • பெளதிக விஞ்ஞானம்
  • இஸ்லாமியக் கற்கைகள்
  • அரபு மொழி

கிழக்குப் பல்கலைக் கழகம்

கற்கை நெறிகள்

  • மருத்துவம்
  • விவசாயம்
  • உயிரியல் விஞ்ஞானம்
  • பெளதிக விஞ்ஞானம்
  • முகாமைத்துவ‌ம்
  • முகமைத்துவக் கற்கைகள்
  • வணிகவியல்
  • தொடர்பாடல் கற்கைகள்
  • கலை
  • தாதியியல்
  • கணனி விஞ்ஞானம்
  • சித்த மருத்துவம்

உறுகுணைப் பல்கலைக் கழகம்

  • கற்கை நெறிகள்
  • கலை
  • முகாமைத்துவ‌ம்
  • மருத்துவம்
  • விவசாயம்
  • இயந்திரவியல்
  • உயிரியல் விஞ்ஞானம்
  • பெளதிக விஞ்ஞானம்
  • மீன் பிடித்தலும் கடல்சார் விஞ்ஞானங்களும்
  • தாதியியல்
  • மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம்
  • மருந்தகவியல்
  • கணனி விஞ்ஞானம்

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்

கற்கை நெறிகள்

  • கலை
  • முகாமைத்துவ‌ம்
  • முகமைத்துவக் கற்கைகள்
  • சட்டம்
  • மருத்துவம்
  • சித்த மருத்துவம்
  • விவசாயம்
  • பிரயோக விஞ்ஞானம்
  • உயிரியல் விஞ்ஞானம்
  • தகவல் தொடர்பாடலும் தொழில்நுட்பமும்
  • பெளதிக விஞ்ஞானம்
  • கணனி விஞ்ஞானம்
  • தாதியியல்
  • மருந்தகவியல்
  • மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம்
  • சங்கீதம்
  • நடனம்
  • சித்திரமும் வடிவமைப்பும்

மொறட்டுவை பல்கலைக் கழகம்

  • கற்கை நெறிகள்

  • இயந்திரவியல்
  • தகவல் தொழில்நுட்பம்
  • கட்டடக் கலை
  • வடிவமைப்பு
  • கணிய அளவையியல்
  • பட்டினமும் நாடும் திட்டமிடல்
  • நவநாகரீக வடிவமைப்பும் உற்பத்தி அபிவிருத்தியும்
  • வசதிகள் முகாமைத்துவம்
  • போக்குவரத்தும் தேவைகள் விநியோக ஒழுங்கமைப்பு முகாமைத்துவமும்
  • தகவல் தொழில்நுட்பமும் முகாமைத்துவமும்

களனிப் பல்கலைக் கழகம்

கற்கை நெறிகள்

  • மருத்துவம்
  • பேச்சும் செவிமடுத்தலும் விஞ்ஞானம்
  • கலை
  • சமாதானமும் முரன்பாடு தீர்த்தலும்
  • முகமைத்துவம்
  • வணிகவியல்
  • முகமைத்துவமும் தகவல் தொழில்நுட்பமும்
  • உயிரியல் விஞ்ஞானம்
  • பெளதீக விஞ்ஞானம்
  • சூழ்ல் பேணலும் முகமைத்துவமும்

பறீ ஜெயவர்த்தனபுரப் பல்கலைக் கழகம்

கற்கை நெறிகள்

  • முகமைத்துவம்
  • பொது முகமைத்துவம்
  • சொத்து முகமைத்துவமும் மதிப்பீடும்
  • வணிகவியல்
  • மருத்துவம்
  • தாதியியல்
  • மருந்தகவியல்
  • மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம்
  • உணவு விஞ்ஞானம்
  • உயிரியல் விஞ்ஞானம்
  • பெளதிக விஞ்ஞானம்

பேராதனைப் பல்கலைக் கழகம்

கற்கை நெறிகள்

  • கலை
  • சட்டம்
  • மருத்துவம்
  • பல் அறுவை சிகிற்சை
  • விலங்கு மருத்துவ விஞ்ஞானம்
  • விவசாய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
  • விலங்கு விஞ்ஞானமும் மீன்பிடித்தலும்
  • இயந்திரவியல்
  • உயிரியல் விஞ்ஞானம்
  • பெளதிக விஞ்ஞானம்
  • புள்ளிவிபரவியலும் செயற்பாட்டு ஆராய்ச்சியும்
  • கணக்கிடலும் முகாமைத்துவமும்
  • தாதியியல்
  • மருந்தகவியல்
  • மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம்
  • ஊடு கதிர் படமெடுப்பு
  • இயன் மருத்துவம்
  • முகமைத்துவம்

கொழும்பு பல்கலைக் கழகம்

கற்கை நெறிகள்

  • கலை
  • முகாமைத்துவம்
  • சட்டம்
  • மருத்துவம்
  • இயன் மருத்துவம்
  • கைத்தொழில் புள்ளிவிபரவியல்
  • மூலக்கூற்று உயிரியல்
  • உயிரியல் விஞ்ஞானம்

இலங்கையில் உள்ள பல்கலைக் கழகங்களின் விபரம் வருமாறு...





logo University of Colombo
கொழும்பு பல்கலைக் கழகம்









logo University of Peradeniya
பேராதனைப் பல்கலைக் கழகம்









logo University of Sri Jayewardenepura
ஸ்ரீ ஜெயவர்த்தானபுறப் பல்கலைக் கழகம்









logo University of Kelaniya
களனிப் பல்கலைக் கழகம்









logo University of Moratuwa
மொறட்டுவை பல்கலைக் கழகம்









logo University of Jaffna
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்









logo University of Ruhuna
உறுகுணைப் பல்கலைக் கழகம்
















logo Eastern University, Sri Lanka
கிழக்குப் பல்கலைக் கழகம்









logo South Eastern University of Sri Lanka
தென் கிழக்கு பல்கலைக் கழகம்









logo Rajarata University of Sri Lanka
ரஜரட்ட பல்கலைக் கழகம்









logo Sabaragamuwa University of Sri Lanka
சப்ரகமுவ பல்கலைக் கழகம்









logo Wayamba University of Sri Lanka
வயம்பப் பல்கலைக் கழகம்









logo Uva Wellassa University

ஊவா வெல்லச பல்கலைக் கழகம்









logo University of the Visual & Performing Arts
கட்புல, அரங்கேற்றல் கலைகள் பல்கலைக்கழகம்

தரம் ஒன்று தொடக்கம் பதின்மூன்று வரையான கல்விப் பயணத்தின் முடிவுபுள்ளியாக நிலைத்திருப்பது பல்கலைக் கழகங்களே!!

எமது யாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில் உயர்தர கல்வியின் பின்னர் பல்கலைக் கழகம் செல்ல வேண்டும் என்ற அவா கல்வி கற்கும் அனைத்து மாணவர்களிடமும் காணப்படுகின்றது.

அதனடிப்படையில், பல்கலைக் கழகங்கள், கற்கை நெறிகள், பல்கலைக் கழக அனுமதி தொடர்பான வலைப்பூவினை(Blog) நிறுவதில் பெருமை அடைகின்றேன்.
அன்புடன்,
த.சுஜீவன்