Monday, February 14, 2011
ஊவா வெல்லச பல்கலைக்கழகம்....
2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் தொழில்சார் கற்கை நெறிகளை உள்ளடக்கி அமைந்துள்ளது.இலங்கையில் இறுதியாக ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.ஆயினும் தமிழ் மாணவர்களிடையே மிகவும் பிரபல்ஜம் அடையாதது கவலைக்குரிய விடையமாகும்.
இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள கற்கை நெறிகள் தொடர்பான விடையங்கள் வருமாறு......
1.விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
2.கனியவளங்களும் தொழில்நுட்பமும்
3.கணினி விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
4.கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம்
5.விலங்கு விஞ்ஞானம்
6.நீர் வாழ் வளங்களும் தொழில்நுட்பமும்
7.ஏற்றுமதி விவசாயம்
8.தேயிலைத்தொழில் நுட்பமும் பெறுமதி சேர்ப்பும்
9.பனையினத்தாவரமும் இறப்பர்பால் தொழில்நுட்பமும்
10.தொழில் முயற்சியும் முகாமைத்துவமும்
11.விருந்தோம்பல் சுற்றுலா நிகழ்ச்சிகள் முகாமைத்துவம்.
சரி இதில என்ன படிக்க இருக்கு ....
· விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
இது ஒன்றும் நீங்க O/L ல படிக்கிறதில்ல.. முற்று முலுதாக தொழில் வாய்ப்புக்களுடன் வடிவமைக்கப்பட்ட கற்கைநெறி இது நான்கு வருட விசேட B-Tech பட்டத்தினை பின்வரும் துறைகளில் பெறுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
1.உணவுப் பொறியியல்(Food processing and Technology)
2.Mechatronics
3.Material Science and Technology
· கனியவளங்களும் தொழில்நுட்பமும்
இது B.Sc நான்கு வருட சிறப்பு பட்டத்தினை பின்வரும் துறைகளில் வழங்குகிறது.
1.கனிப்பொருள் விஞ்ஞானம்
2.நீரியல் விஞ்ஞானம்
· கணினி விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
இது B.Sc நான்கு வருட சிறப்பு பட்டத்தினை பின்வரும் துறைகளில் வழங்குகிறது.
1.கணினி மென்பொருள்
2.கணினி வன்பொருள்
3.கணினி வலையமைப்பு
4.பல்லூடகம் (Multimedia)
5.Artificial Intelligence
· கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம்
இது BIIT நான்கு வருட சிறப்பு பட்டத்தினை பின்வரும் துறைகளில் வழங்குகிறது.
இது கைத்தொழில் மென்னியல் கற்கை நெறிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இலங்கையில் முகாமைத்துவ தகவல் தொழில் நுட்பதுறையினை முன்னேற்றுவதற்க்காக வடிவமைக்கப்பட்ட கற்கை நெறியாகும்.
· விலங்கு விஞ்ஞானம்
BA.Sc நான்கு வருட சிறப்பு பட்டத்தினை பின்வரும் துறைகளில் வழங்குகிறது. இது இலங்கையை உள்நாட்டு கால்நடை உற்பத்தித்துறையில் தன்னிறைவடையச்செய்வதற்காக உருவாக்கப்பட்ட கற்கை நெறியாகும்
· நீர் வாழ் வளங்களும் தொழில்நுட்பமும்
இது B.Sc நான்கு வருட சிறப்பு பட்டத்தினை பின்வரும் துறைகளில் வழங்குகிறது.இது இலங்கையை உள்நாட்டு நீரியல் வளம் சார்ந்த உற்பத்தித்துறையில் தன்னிறைவடையச்செய்வதற்காக உருவாக்கப்பட்ட கற்கை நெறியாகும்
· ஏற்றுமதி விவசாயம்
இது B.Sc நான்கு வருட சிறப்பு பட்டத்தினை பின்வரும் துறைகளில் வழங்குகிறது.இது இலங்கையை உள்நாட்டு ஏற்றுமதி சார்ந்த உற்பத்தித்துறையில் தன்னிறைவடையச்செய்வதற்காக உருவாக்கப்பட்ட கற்கை நெறியாகும்
· தேயிலைத்தொழில் நுட்பமும் பெறுமதி சேர்ப்பும்
இது B.Sc நான்கு வருட சிறப்பு பட்டத்தினை பின்வரும் துறைகளில் வழங்குகிறது.இது இலங்கையை உள்நாட்டு பெறுமதி சேர்க்கப்பட்ட தேயிலை உற்பத்திக்காக உருவாக்கப்பட்ட கற்கை நெறியாகும்
· பனையினத்தாவரமும் இறப்பர்பால் தொழில்நுட்பமும்
இது B.Sc நான்கு வருட சிறப்பு பட்டத்தினை பின்வரும் துறைகளில் வழங்குகிறது.இது இலங்கையை உள்நாட்டு பனையினத்தவார பெறுமதி சேர்ப்புக்காகவும் இறப்பர்பால் சார் உற்பத்திக்காகவும் உருவாக்கப்பட்ட கற்கை நெறியாகும்
· தொழில் முயற்சியும் முகாமைத்துவமும்
இது BBM நான்கு வருட சிறப்பு பட்டத்தினை பின்வரும் துறைகளில் வழங்குகிறது.இது முகாமைத்துவத்துடன் தொழில் முயற்சியான்மையையும் ஒன்றினாத்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விருந்தோம்பல் சுற்றுலா நிகழ்ச்சிகள் முகாமைத்துவம்.
இது BBM நான்கு வருட சிறப்பு பட்டத்தினை பின்வரும் துறைகளில் வழங்குகிறது இது இலங்கை சுற்றுலாத்துறை சார் நாடென்ற வகையில் இலங்கையின் சுற்றுலாத்துறையை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்ட கற்கை நெறியாகும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment